Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 10 இலட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப் படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி இன்று (28.11.2022) வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 12,29,285 மொத்த வாக்காளர்களில் 81.49 சதவீதம், அதாவது 10,01,662 வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் எதிர்வரும் 08.12.2022 வரை படிவங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மைய அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று நாளது வரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் விவரங்களை சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884