மத்திய அரசால் கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் “பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான “பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது” பெற தகுதியுடையவர்கள் உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன் https://awards.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக 31.10.2022 (மாலை 05.00 மணி)-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
என்றும், விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


