தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்ட மேல்மூத்தோர் மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன் மற்றும் அறிவழகன், இளையராஜா பள்ளியின் தலைமை ஆசிரியர் லக்சுமணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவா கிருஷ்ணன் பொறுப்பாளர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
