சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அதிமுக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.. போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை துவக்கினர். அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருந்த எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைதை கண்டித்து கடத்தூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மதிவாணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், உடனடியாக போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
