தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களையும், அதிமுக எம்எல்ஏக்கள் ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும், சபாநாயகரை கண்டித்து மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில் நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் கணபதி, கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, பாலகிருஷ்னன், சுப்ரமணி, கவுன்சிலர் விமலன், குருமணிநாதன், மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சுமைதூக்குவோர் சங்க தொழிலாளர்கள் , கட்டுமான தொழிலாளர்கள் , தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் , பாலக்கோடு 18 வார்டு கிளை செயலாளர்கள், தொண்டர்கள் என போரட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
