தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அடிக்கடி சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதலிலேயே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், சோளைக்கொட்டாய், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த்து, கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை வருகிறது.


