பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி.

IMG_20221028_202934

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது. 26) இவர் பி.டெக் முடித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார், திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர்.

Science%20Google%20Form%20Header

கடந்த வாரம் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்க்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மணமுடைந்து காணப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் மலை மீது ஏறி தன் உடல் முழுவதும் மண்ணென்னை ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்து கொண்டு இறந்து விட்டார்.


முன்னதாக தனது அக்காவின் செல்போனுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்ரிக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரானை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad