கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 அக்டோபர், 2022

கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி,  தேவரசம்பட்டியில் தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (29.10.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பாரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகளை பாரமரித்தல் குறித்த விழிப்புணர்வும் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்பட்டது.


பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:-



தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி,  தேவரசம்பட்டியில் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் இச்சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் 200 கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  

இம்முகாம்களில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பாரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களில் இம்முகாம்கள் நடத்தப்படும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 


தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொழில் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பருவமழை மற்றும் பருவகாலநிலை மாற்றம் காரணமாக கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்திட பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள இக்கால்நடை சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு முன்னெச்செரிக்கையாக தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதோடு, குடற்புழு நீக்க சிகிச்சையினையும், உரிய பாரிசோதனைகளையும் செய்துக்கொண்டு கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். 

எனவே, பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள இச்சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், பாரிசோதனைகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும் செய்துக்கொண்டு கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வையும் அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி,  தேவரசம்பட்டியில் தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று துவக்கி வைத்து, சிறந்த கறவை மாடுகள் மற்றும் சிறந்த கன்றுகள் பாரமரிப்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சன்றிதழ்களை வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், துணை இயக்கநர் மரு.எஸ்.மணிமாறன், கால்நடை நோய் பிரிவு உதவி இயக்குநர் மரு.சண்முகசுந்தரம், நல்லம்பள்ளி கால்நடை மருத்துவர் மரு.மாதப்பன், கால்நடை உதவி மருத்துவர் மரு.சரவண செல்வன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.                                                                           


கருத்துகள் இல்லை:

Post Top Ad