வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் உள்மாநில அளவிளான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயணம் மாநில வேளாண்மை இயந்திரங்கள் தகவல் மையம், தலைப்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கோயம்புத்தூர்க்கு 27.10.2022 மற்றும் 28.10.2022 அன்று விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டது.
இக்கண்டுணர்வு சுற்றுலாவில் பண்ணை இயந்திரங்களான உழவு செய்யும் கருவிகள், மக்காச் சோளம் விதைக்கும் இயந்திரம், கூட்டு நெல் அறுவடை இயந்திரம், விதை சீரான முறையில் விதைக்கும் இயந்திரம்,உளி கலப்பை, தென்னை நார் கழிவு இடும் கருவி ஆகியவற்றின் பயன்கள் குறித்தும் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதன் பின்னர் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து திரு. தீனதயாளன் உதவி பேராசிரியர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் காட்டு பன்றியால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்க அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
பின் பிற்பகலில் திருமதி. அமுதச்செல்வி அவர்கள் உணவு பதப்படுத்துதல் மற்றும் தானியங்கள் மதிப்பு கூட்டப் பயன்படும் இயந்திரங்களான பயறு வகைகள் தோல் நீக்கம் செய்யும் இயந்திரம், நிலக்கடலை தோல் நீக்கம் செய்யும் இயந்திரம், ஐஸ்கிரீம் செய்யும் இயந்திரம், பேக்கிங் செய்யும் இயந்திரம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.
இக்கண்டுணர்வு சுற்றுலாவில் திரு. கிருஷ்ண மூர்த்தி மற்றும் திருமதி. தமிழ்செல்வி உதவி தொழில்நுட்ப அலுவலர்கள், 50 விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக