மாவட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 அக்டோபர், 2022

மாவட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு துவக்கம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவ-மாணவர்களுக்கு இலவச கராத்தே பயிற்சி வகுப்புக்கனை ஊராட்சி மன்ற தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான மாரியப்பன் துவக்கி வைத்தார்.

மாணவர்களின் உடலும், உள்ளமும் மேம்படும் வகையிலும், தண்ணம்பிகை, விடாமுயற்சி, ஒற்றுமை போன்றவற்றை வளர்க்கும் நோக்கில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வகுப்புக்களை துவக்கி வைத்தனர். இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு நெல்லிக்கணி அறக்கட்டளை நிர்வாகி மலை முருகன், கலந்து கொண்டு கராத்தே பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கராத்தே மாஸ்டர் உமாகாந்தன் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad