Type Here to Get Search Results !

காவிரியில் வெள்ளப்பெருக்கு வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

நேற்று காலை வினாடிக்கு 78,000 கனடியில் இருந்து இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் காவிரி கரையோரம் ஒகேனக்கல், ஊட்டமலை, நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒகேனக்கல் மற்றும் ஊட்டமலை பகுதிகளில் காவிரி ஆற்றோரும் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இவர்கள் ஒகேனக்கல் மற்றும் ஊட்டமலை அரசு  பள்ளிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை வருவாய் மற்றும்  வளர்ச்சித் துறை அலுவலர்கள் வட்டார ஊராட்சி  அலுவலர் வடிவேல், கிராம ஊராட்சி அலுவலர் ரங்கநாதன், ஒகேனக்கல் சிறப்பு ஊராட்சி அலுவலர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies