நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் கடை வீதி ராஜவீதி, பிள்ளையார் கோவில் தெரு தெருவையும் இணைக்கும் சாலை வழியாக ஏராளமான கார், பஸ், மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அந்த வழியாக இயக்கப்படுகின்றது மேலும் அந்தப் பகுதியில் அரசு மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம், கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 18 ஆண்டுகளாக இந்த தெருவில் புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த சாலை போக்குவரத்துக்கு உபயோகமற்ற சாலையாக மாறிவிட்டது.
சாலை முழுவதும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் .சாக்கடை கால்வாய் கழிவு நீர்கள் குடிநீர் கலந்து விடுகின்றனர் கடந்த சில நாட்களாக அந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள்பொதுமக்கள் வாகன ஓட்டைகள் சாலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


