தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.44.00 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அரசாணை எண். 468 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 26.09.2022-ன் படி ரூபாய் 36.62 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் இக்கட்டிடத்திற்கு தேவையான பிற வசதிகள் ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி வரும் நிதியினை வரும் நிதியாண்டில் பெற்றுக்கொள்ள்லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிதாக கட்டப்பட உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடமானது 6 தளத்துடன் மொத்தம் 11,672 சதுர மீட்டரில் தானியங்கி வசதியுடன் கூடிய தேவையான விரிவான மதிப்பீடு தயாரித்து தொழில்நுட்ப அனுமதி பெற்று வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
முன்னதாக மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் இராஜகோபுரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்று (16.10.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
மேலும், இத்திருக்கோயில் வளாகம் மற்றும் இத்திருக்கோயிலின் தேர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, காரிமங்கலம் பேரூராட்சித்தலைவர் / கோவில் திருப்பணிக் குழு தலைவர் திரு.பி.சி.ஆர்.மனோகரன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் திரு.ஏ.சிவக்குமார் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் திரு.சி.சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.எம்.உதயகுமார், செயல் அலுவலர் திரு.சின்னுசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


.jpg)