தருமபுரியில் புதை படிவங்கள் நிகழ்வாக கண்காட்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தருமபுரியில் புதை படிவங்கள் நிகழ்வாக கண்காட்சி நடைபெற்றது.

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்  தர்மபுரி புவி அமைப்பியல் துறை சார்பாக இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று புதை படிவங்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் 1200 வருடத்துக்கு முன்பு இருந்த மரம் இப்போது கல்லாக மாறியதை கண்டு மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர் மற்றும் டைனோசர் உயிரினம் எப்படி இருந்தது மற்றும் அழிந்தது போன்ற தகவல்களை மாணவர்கள் கேட்டறிந்து தெரிந்து கொண்டனர்.

கடல் உயிரினங்கள் எப்படி உணவு உட்கொள்ளப்பட்டது  போன்ற கற்கள் தண்ணீரில் உள்ள தாவரங்கள் மைக்ரோஸ்கோபிக் மூலம் மாணவர்கள் பார்வையிட்டனர் எரிமலை எப்படி உருவானது அழிந்தது போன்ற நிகழ்வு காட்சி செய்து காட்டப்பட்டது பார்வையிட்ட அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்துடன் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் முன்னதாக இயக்குனர் பொறுப்பு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார் இந்நிகழ்வை முனைவர் நந்தகுமார் மற்றும் சஞ்சய் காந்தி அருண் பாரதி வித்யாசாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.