Type Here to Get Search Results !

அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்.

பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சி ஜங்கமயனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஜங்கம்மையனூர் கிராமத்தில் ஆலமரத்தடியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைக்க வேண்டும் ஜங்கமையனூர் கிராமத்தில் இருந்து செங்கனூர் வரை தார் சாலையை புதுப்பிக்க வேண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது/

போராட்டத்திற்கு முன்னாள் பகுதி செயலாளர் ஜே பி சுப்பிரமணி தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி மாதன் பகுதி குழு செயலாளர் வி ரவி மாவட்ட குழு உறுப்பினர்கள் கே அன்பு ஆ.ஜீவானந்தம் பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி சக்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை  விலக்கி உரையாற்றினார்  வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies