Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் வீட்டில் டிவியின் பின்புறத்தில் தனி அறை அமைத்து 600 மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்த மாமியார் மருமகள் கைது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மதுபாட்டில்கள் இரவு பகலாக தாளாரமாக கிடைக்கிறது. இது போன்று சந்துக்கடைகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். 

அதில் ஆயிரகணக்கான மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து காவல்துறையினருக்கு டிமிக்கு கொடுத்து வந்துள்ளனர். பின்னர் அந்த அறையில் இருந்த 600க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பின்னர் மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்த போது, தீபாவளி பண்டிகையொட்டி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்க்காக வைத்திருந்தாக கூறினர். 

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் சந்துகடையில் மதுவிற்பனை செய்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies