இந்த முகாமில் கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ம.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது : பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது.
கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே அதிக முக்கியம் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் பிரிவுகள் அல்லாத பிற பாடப் பிரிவுகளிலும் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிக மாத ஊதியம் பெறும் நிலையுள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பை தேர்வு செய்யும்போதே எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் டிஜிட்டல் யூகத்திற்கான கல்வி பற்றியும் தங்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்து உயர்கல்வியில் சேர வேண்டும் என தெரிவித்தார்.
இதில், ஆர்.வி.எஸ். கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் விசுவாசம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
