பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தமிழ் செல்வன், விஸ்வநாதன், தர்மலிங்கம், தமிழ்செல்வி, முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம், விவசாய சங்க தலைவர் காசி, நகர தலைவர் சண்முகம், தொண்டு நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. சாந்தி இ ஆ ப அவர்கள் கலந்து கொண்டு பாப்பாரப்பட்டி சின்ன ஏரியின் முன் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.100க்கும் மேலான பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
