அரூர் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் விவசாயிகள் கண்டுணர்வு பயணம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

அரூர் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் விவசாயிகள் கண்டுணர்வு பயணம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு பயணம் அறுவடைக்குப் பின் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் அரூர் மற்றும் திட்ட இயக்குனர் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தர்மபுரி அவர்களின் ஆலோசனைப்படி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மதிகோன்பாளையம் தர்மபுரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கண்காணிப்பாளர் திரு முரளிதரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தங்களுடைய விலை பொருட்களை அறுவடைக்கு பின் எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் தங்கள் விலை பொருட்களை எவ்வாறு மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள்.


மேலும்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்குமாறு கூறினார்கள் மேலும் புளி குளிர்பதன கிடங்கில்  வைத்து  அதிக விலை வரும் பொழுது விவசாயிகள் விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெறுமாறு எடுத்துக் கூறினார்கள் மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்  இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு திருப்பதி மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad