இக்கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தலைமையேற்று, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
முன்னதாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு அரசின் பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள் குறித்தும் நடைபெற்ற 3-ஆம் காலாண்டு 2022-2023-க்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் வங்கிகள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது வேளாண் கடனுதவிகள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடனுதவிகள், தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவிகள் உள்ளிட்ட அரசின் மானியத்துடன் வழங்க வேண்டிய கடனுதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் உள்ளிட்ட அனைத்து கடனுதவிகளையும் தகுதியான நபர்களுக்கு விரைந்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற பல வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அத்தகைய அரசின் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் தருமபுரி மாவட்டத்தில் துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். வேளாண்மை வளரச்சிக்கும், விவசாயிகளின் உயர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் ஏதாவது ஒரு திட்டங்களின் மூலம் ஒரு விவசாயி அல்லது ஒரு பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ள 57 கிராமங்களிலும் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து, அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து, ஒவ்வொரு நபரும் அரசின் ஒரு திட்டங்களிலாவது பயன்பெறுகின்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதற்கு அனைத்து துறை அலுவலர்களும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையோடு ஒன்றிணைந்து சிறப்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும். துறை அலுவலர்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் திட்டங்களை தகுதியான நபர்கள் பெற்று பயன்பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு கிடைப்பதை ஒவ்வொரு துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும். மேலும், அரசுத்துறைகளின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்ற சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காலதாமதமின்றி உடனுக்குடன் மக்களுக்கு கிடைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகின்ற அனைத்து வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்றிட அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் சக்தி அபியான் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், தருமபுரி நகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட தொழில்மையம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நில அளவைத்துறை, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் ஒவ்வொரு துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திரு.கே.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.மரியம் ரெஜினா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.வி.குணசேகரன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமதி.பத்மாவதி ஸ்ரீகாந்த், இந்தியன் வங்கியின் தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கே.கண்ணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.பி.கார்த்திகைவாசன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. பிரவீன் பாபு, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு.சி.வெங்கடாஜலம், உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.சி.முத்து உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக