அருண்குமார் சமீப காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்துள்ளார். மேலும் ஆவி ஒன்று தன்னை கொலை செய்ய பின் தொடர்ந்து வருவதாக கூறி வந்திருக்கிறார்.
நேற்று மாலை ஓசூரில் இருந்து பாலக்கோட்டிற்க்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தவர், வெள்ளி சந்தை அருகே வரும் போது தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்து கொண்டு ஆவி என்னை கொல்ல பார்க்கிறது என்று அலறி உள்ளார்.

இவரின் செயலை பார்த்து சகபயணிகள் அலறி அடித்து கொண்டு கத்த ஆரம்பித்தனர். பேருந்தை பாலக்கோடு பஸ் நிலையத்தில் நிறுத்தி இரத்த காயங்களுடன் இருந்த அருண்குமாரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் நடைபெறாததால் மன விரக்தியில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக