அரூர் அருகே கே. வேட்ரப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அ. ஈச்சம்பாடி சந்தை பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 15 குடும்பங்கள் 35 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தலைமுடி விலைக்கு வாங்கி ஜவுரி பின்னும் தொழில் செய்து வருகின்றனர். வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்து உள்ளனர். இதற்கு முன்பு இருந்த தர்மபுரி மாவட்ட பெண் கலெக்டர் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மாவட்ட கலெக்டரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம் அவர்கள் பட்ட வழங்க அரூர் தாசில்தார்க்கு உத்தரவிட்டார். அதன் பேரில் இரு முறை ஈச்சம்பாடிக்கு வந்து நிலம் அளவீடு செய்தனர். ஆனால் இன்றுவரை பட்டா வழங்கவில்லை. தாசில்தாரை சந்திக்க சென்றாள் அவர் எங்களை தரை குறைவாக பேசுகிறார்.

பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் பைப் வேண்டுமென மனு கொடுத்தோம் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை பின்னர் சொந்த செலவில் ஒரு தெரு பைப் மட்டும் நாங்களே அமைத்து கொண்டோம் எங்களுக்கு அரசு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வழங்கி உள்ளது. வீட்டு வரி ரசீதும் கட்டி வருகிறோம். வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு ஆகியவற்றை திருப்பி அரசிடம் ஒப்படைப்போம்.
பெண்கள் குளிப்பதற்கு பாத்ரூம் வேண்டுமென மனு கொடுத்தும் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.பாத்ரூம் வசதி இல்லாததால் ஆண்கள் கண் முழிப்பதற்கு முன்பாகவே பெண்கள் அதிகாலையிலேயே வீதியில் குளிக்கும் நிலை உள்ளது.
சிலர் பழைய சேலைகளை கொண்டு பாத்ரூம் அமைந்து பயன்படுத்துகின்றனர். எங்களுக்கு வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக