பொ. மல்லாபுரம் பேரூராட்சி பகுதியில் கட்டுமானம் இல்லாத சாக்கடை நீர் பொதுமக்கள் நடைபாதையில் செல்வதால் நோய் தொற்று அபாயம்.
தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி 15 வார்டுகள் உள்ளடக்கியது இதில் 7 வார்டு மற்றும் 8 வார்டு பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 15 ஆண்டு காலமாக முறையாக சாக்கடை கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் நடக்கும் பாதையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் செல்கிறது அப்பகுதியில் செல்லும் குழந்தைகள் முதியோர்கள் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அவலநிலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.