தருமபுரி அருகே இரவு நேரத்தில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் திகிலோடு கிராமத்தில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
விளைபயிர்களை சேதபடுத்தி வரும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்கிலி, பெரியூர், திகிலோடு, நாகனம்பட்டி, எலும்பள் மந்தை, மருக்காரம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வருவதாகவும் கிராம வேதனை தெரிவித்தனர்.
யானைகள் ஊருக்குள் புகுந்து விடாதபடி மின் வேலி அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது, காட்டு யானைகளை விரட்டும் பணியில் பாலக்கோடு வனத்துறையி்னர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு பகுதியிலிருந்து யானைகள் விரட்டியடிக்கபட்டாலும், வேறு ஒரு பகுதிக்கு சென்று அட்டகாசம் செய்வது தொடர்கிறது, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.