தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (31.10.2022) தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினை பேணிப்பாதுகாக்கும் பொருட்டும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாளை தேசிய ஒற்றுமை நாளாக Rashtriya Ekta Diwas (National Unity Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நமது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்யவும், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினை கட்டிகாத்திடவும், இன்றைய தினம் (31.10.2022) தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டு, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியான ”இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார் உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.” என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு, பள்ளிக்கல்வித்துறை, தருமபுரி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சேலம்-தருமபுரி பிரதான சாலை, பாரதிபுரம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட கருவூல அலுவலர் திரு.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.அருண்மொழித்தேவன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு.கேசவமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) திரு.அன்பு உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக