Type Here to Get Search Results !

யாணைகளுக்கு இடையே நடந்த சண்டையில் பெண் யாணை இறந்த சோகம்.

மாதிரி படம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி காப்புக் காட்டில் கடந்த 21ம் தேதி யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆண் யானையின் தந்தத்தால் 22 வயது மதிக்கதக்க பெண் யானையின் வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு பெண் யானை இறந்தது.

தகவலறிந்த பாலக்கோடு வனச்சரகர் நடராஜன்  சம்பவ இடத்திற்க்கு சென்று யானை இறந்ததை உறுதி செய்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு, கன்சால்பைல் கிராம திட்ட தலைவர் பச்சியப்பன் முன்னிலையில் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து யானையை அங்கேயே அடக்கம் செய்தனர்.

யானைகளுக்கிடையே நடந்த சண்டையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies