பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் வைரஸ் நோயால் கொத்து கொத்தாக இறக்கும் மாடுகள் விவசாயிகள் கவலை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் விவசாயி கோவிந்தன் என்பவரது 2 வயது நாட்டுமாடு கண்று குட்டி அம்மை நோய் பாதிக்கப்பட்டு கடந்த 1மாதமாக உயிருக்கு போராடி வருகின்றது.
கால்நடை மருத்துவர்கள் கண்று குட்டி உயிர் பிழைக்காது இதற்கு அரசாங்கத்தில் மருந்து இல்லை என தெரிவித்து விட்டதால் செய்வதறியாது திகைத்னர்.
எப்படியாவது கண்று குட்டியை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் மஞ்சள், வேப்பிலை அரைத்து நாட்டு வைத்தியம் பார்த்து வருகின்றனர்.
கன்று குட்டியை காப்பாற்ற போராடு விவசாயி கோவிந்தன் குடும்பத்தாரின் பாசம் பொதுமக்களை நெகிழ செய்துள்ளது.
இது போன்று இப்பகுதியில் நாட்டு மாடுகளுகளை குறிவைத்து நோய் பரவி மாடுகள் இறந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.