Type Here to Get Search Results !

அரூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறப்பு.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்ட, கோவிந்தசாமி நகர் மற்றும் பச்சினாம்பட்டி ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா இன்று (16.10.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார். 

இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு 2 புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகப் பொருட்களை வழங்கினார்கள்.

கூட்டுறவுத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கே.கே. 151 அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் அரூர் கடை எண் 2 நியாய விலைக்கடையினை பிரித்து, கோவிந்தசாமி நகர் பகுதியில் 251 குடும்ப அட்டைகளுடன் இயங்கும் வகையில் புதிய முதலாவது பகுதி நேரக் கடை அமைக்கப்பட்டு, இப்புதிய பகுதி நேர நியாய விலைக்கடை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்களிலும் இயங்கும் மற்றும் அரூர் கடை எண் 2 நியாய விலைக்கடையிலிருந்து, புதிய பகுதி நேர நியாய விலைக்கடை பிரிக்கப்பட்ட பின்னர் அரூர் கடை எண் 2 நியாய விலைக்கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இயங்கும்.

மேலும், கொளகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் எச்.தொட்டம்பட்டி நியாய விலைக்கடையினை பிரித்து, பச்சினாம்பட்டி கிராமத்தில் 180 குடும்ப அட்டைகளுடன் இயங்கும் வகையில் புதிய முதலாவது பகுதி நேரக் கடை அமைக்கப்பட்டு, இப்புதிய பகுதி நேர நியாய விலைக்கடை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்களிலும் இயங்கும் மற்றும் எச்.தொட்டம்பட்டி நியாய விலைக்கடையிலிருந்து, புதிய பகுதி நேர நியாய விலைக்கடை பிரிக்கப்பட்ட பின்னர் எச்.தொட்டம்பட்டி நியாய விலைக்கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இயங்கும். 

இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமரைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி தலைவர் திருமதி. த. இந்திராணி, துணைத்தலைவர் திரு.து.தனபால் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ர.குருராஜன், அரூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி.கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் திரு.சி.சுப்பிரமணி, அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.இரா.கலைராணி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies