இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து வழி நீட்டிப்பு செய்யப்பட்ட 7 வழித்தடங்களில் நகர பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மண்டல பொது மேலாளர் திரு.எஸ்.ஜீவரத்தினம் அவர்கள், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.லட்சுமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய தினம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்நீட்டிப்பு
செய்யப்பட்ட 7 வழித்தடங்களில் செல்லும் நகர பேருந்துகளின் மூலம் 14 கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 17000 மேற்பட்டோர் பயன்பெறுவார்கள்.
இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இந்நீட்டிப்பு செய்யப்பட்ட 7 வழித்தடங்கள்
- பாலக்கோடு கிளையின் மூலம் பாலக்கோடு முதல் பொப்பிடி வழியாக பெல்ராம்பட்டி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, பாலக்கோடு முதல் பொப்பிடி, கன்சால்பைல் வழியாக பெல்ராம்பட்டி வரையிலும்,
- தருமபுரி நகர் கிளையின் மூலம் தருமபுரி முதல் பைசுஅள்ளி வழியாக மாட்லாம்பட்டி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, தருமபுரி முதல் செம்மனஅள்ளி, ஜக்குப்பட்டி, கொல்லப்பட்டி வழியாக கம்பைநல்லூர் வரையிலும்,
- தருமபுரி நகர் கிளையின் மூலம் தருமபுரி முதல் கம்பைநல்லூர், பெரமாண்டப்பட்டி வழியாக கதிரம்பட்டி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, தருமபுரி முதல் கம்பைநல்லூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பைநல்லூர், பெரமாண்டப்பட்டி வழியாக கதிரம்பட்டி வரையிலும்,
- தருமபுரி நகர் கிளையின் மூலம் தருமபுரி முதல் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி வழியாக காரிமங்கலம் வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, தருமபுரி முதல் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, காரிமங்கலம் வழியாக எர்ரசீகலஅள்ளி வரையிலும்,
- ஊத்தங்கரை கிளையின் மூலம் ஊத்தங்கரை முதல் வீராச்சிக்குப்பம், கல்லாவி, எம்.வெள்ளாளப்பட்டி வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, ஊத்தங்கரை முதல் வீராச்சிக்குப்பம், கல்லாவி, எம்.வெள்ளாளப்பட்டி, பெரமாண்டப்பட்டி வழியாக இ.அக்ரஹாரம் வரையிலும்,
- தருமபுரி நகர் கிளையின் மூலம் தருமபுரி முதல் அரசு மருத்துவமனை, அமலா மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி வழியாக ஏலகிரி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, தருமபுரி முதல் அரசு மருத்துவமனை, அமலா மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி, ஏலகிரி வழியாக கமலநத்தம் வரையிலும்,
- தருமபுரி நகர் கிளையின் மூலம் தருமபுரி முதல் இண்டூர் வழியாக காளேகவுண்டனூர் வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, தருமபுரி முதல் இண்டூர், M.K.S நகர் வழியாக காளேகவுண்டனூர் வரையிலும் மற்றும் பென்னாகரம் கிளையின் மூலம் கொங்கலாகெட்டு முதல் ஜம்பேரி முனியப்பன்கோவில், இண்டூர் வழியாக தருமபுரி வரை இயங்கி வந்த பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, கொங்கலாகெட்டு முதல் ஜம்பேரி முனியப்பன்கோவில், கூலிக்கொட்டாய், இண்டூர் வழியாக தருமபுரி வரையிலும்,
ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் கடந்த 13.08.2022 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் இதுவரை பேருந்து வசதிபெறாத வத்தல்மலைக்கு தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் முதன்முதலாக பேருந்து சேவை தொடங்கி வைத்த்தோடு, அன்றைய தினம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்ட 16 வழித்தடங்களில் பேருந்து சேவைகளையும் தொடங்கிவைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.தாமரைச்செல்வன், திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் (வணிகம் மற்றும் போக்குவரத்து) திரு.டி.மோகன்குமார், (தொழில்நுட்பம்) திரு.இராஜேந்திரன் உட்பட அலுவலர்கள், போக்குவரத்து கழக தொழில் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


.jpg)