Type Here to Get Search Results !

அரூர் பேரூராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (16.10.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.83.50 இலட்சம் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் வள மீட்பு பூங்காவில் காவலர் அறை, கழிப்பறை கட்டுதல் மற்றும் வின்ரோ பிளாட்பாம் அமைக்கும் பணிகளுக்கும், வார்டு எண்.4-க்குட்பட்ட தீர்த்தமலை மெயின்ரோடு முனியப்பன் கோயில் முதல் மாவேரிப்பட்டி வரை ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்யும் பணிக்கும், அம்பேத்கார் நகர் சுடுகாட்டிற்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல், நடைமேடை அமைத்தல், காத்திருப்பு அறை கட்டும் பணிகளுக்கும், வார்டு எண்.2, 11, 12, 14, 16 ஆகிய பகுதிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கும், வார்டு 2-க்குட்பட்ட பூங்காவிற்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி பொருத்தும் பணிக்கும், வார்டு எண்.3 வர்ணதீர்த்தம் பகுதி, வார்டு எண்.5 அம்பேத்கார் நகர் மற்றும் வார்டு எண்.17 பழையப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா ரூ.4.50 இலட்சம் வீதம் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் பராமரிப்பு பணிகளுக்கும் என அரூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.83.50 இலட்சம் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.

இவ்விழாவில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமரைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி தலைவர் திருமதி. த. இந்திராணி, துணைத் தலைவர் திரு.து.தனபால் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ர.குருராஜன், அரூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி.கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் திரு.சி.சுப்பிரமணி, அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.இரா.கலைராணி, பேரூராட்சிகள் துறையின் இளநிலை பொறியாளர் திரு.ராமலிங்கம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies