தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு முதன்மை செயலாளர் முனைவர். அதுல் ஆனந்த் அவர்கள் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு முதன்மை செயலாளர் முனைவர். அதுல் ஆனந்த் அவர்கள் ஆய்வு.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பி.கொல்லஅள்ளி ஊராட்சி, பொடுத்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், புலிக்கரை ஊராட்சி, இருளப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதையும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் பள்ளிக்குழந்தைகளையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில், இன்று (28.10.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து கேட்டறிந்ததோடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவை ஆய்வு செய்து, தானும் காலை சிற்றுண்டியினை உண்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.


பின்னர் அக்குழந்தைகளிடம் காலை உணவு உங்களுக்கு எப்படி இருக்கின்றது என கேட்டார்கள். அதற்கு அக்குழந்தைகள் எங்களுக்கு தினந்தோறும் கொடுக்கப்படும் காலை உணவு மிக நன்றாக இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் பள்ளியில் தான் காலை உணவு சாப்பிடுகின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான காலை உணவு கிடைக்கின்றது என்று அக்குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பின்னர், குழந்தைகளுக்கு காலை உணவு சமைத்து வழங்கப்படுகின்ற சமையலறை கூடம், உணவு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்ததோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி அரசு அறிவித்துள்ள உணவு பட்டியலின்படி சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க, சத்தான உணவுகளை சமைத்து வழங்கிட வேண்டுமெனவும், இதனை கண்காணிக்கும் ஒவ்வொரு பள்ளிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து இதனை உறுதி செய்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


இதனை தொடர்ந்து, தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், இயங்கி வரும் அரசு மாதிரிப்பள்ளியில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 


இந்த அரசு மாதிரிப்பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் வசதிக்காக சிறந்த வகுப்பறை வசதி, தங்கும் விடுதி வசதி, சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இம்மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் மூலம் சிறப்பான கல்வி கற்பிக்கப்படுவதையும் மற்றும் கற்றல் முறைகள் குறித்தும், பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் சிறப்பான கல்வி மற்றும் தேவையான பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படுவது குறித்தும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தார். மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவற்றையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், தரமான உணவு உள்ளிட்டவற்றை அரசு அறிவித்துள்ள உணவு பட்டியலின்படி தரமாகவும், தாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அலுவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


பின்னர், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சி, செந்தில் நகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக்கடையில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்தும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.


மேலும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் கிராமத்தில் உள்ள தெல்லானஅள்ளி ஏரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-2022-ன் கீழ் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ.1.12 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை கொண்டு, நீர் நிலைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் சுமார் 205 ஏக்கர் பரப்பளவு கொண்ட திண்டல் ஏரியில் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூ ரூ.46.70 இலட்சம் மதிப்பீட்டில் ஏரியின் மதகு பழுதுநீக்கல், ஏரியினை சீரமைத்து, புனரமைக்கப்பட்டுள்ளதையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


பின்னர் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களையும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் அரசு அலுவலர்கள் முழுமையாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வளரச்சிக்கும், மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை ஒவ்வொரு துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


இந்த ஆய்வுகளின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திரு.கே.குமார், பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad