மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 அக்டோபர், 2022

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

     
தருமபுரி மாவட்ட   ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்   தலைமையில் இன்று (31.10.2022) நடைபெற்றது.


இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 584 மனுக்கள் வரப்பெற்றன.


இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.இராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad