Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை துவக்க விழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலக்கோடு முதல் கன்சால்பைல் வரை அரசு டவுன் பஸ் வசதி வேண்டி கோரிக்கை அளித்து வந்தனர். அதனடிப்படையில் தர்மபுரி அரசு  போக்குவரத்து கழகம் சார்பில் இக்கிராமத்திற்க்கு புதிய வழித்தடம் ஏற்படுத்தி நகர பேருந்தை இயக்க அனுமதி வழங்கியது, அதனை தொடர்ந்து நேற்று  கன்சால்பைல் கிராமத்திலிருந்து பாலக்கோட்டிற்க்கு புதிய பேருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர் முனியப்பன், பொருளாளர் குமார், துணை செயலாளர் அற்புதம் செந்தில், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணிசெழியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன், பிரகாஷ், சுப்பிரமணி, கவுன்சிலர் துரை, முன்னாள் துணைச் செயலாளர் தர்மன், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி, மற்றும் நிர்வாகிகள் முனிவேல், முனிராஜ், சாந்தம், மூர்த்தி,ரங்கன், வேலு,  முருகேசன், ஜெய்சங்கர், கிருஷ்ணன்   மற்றும் கன்சால்பைல் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies