Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியின் இரண்டாவது கட்ட 2.0 விழிப்புணர்வுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட  நிகழ்ச்சியின் இரண்டாவது கட்ட 2.0 விழிப்புணர்வுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திருமதி சாந்தி இ ஆ ப அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி  அனிதா முன்னிலை வகித்தார். நேரு யுவ கேந்திராவின்மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம்பரத், அக்டோபர் 31வரை மேற்கொள்ளவுள்ள தூய்மை இந்தியா விழிப்புணர்வு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்.

ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குநர், ஜுனியர் ரெட் கிராஸ் சொஸைட்டி செயலாளர் அருள்செல்வன், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் கோவிந்தராஜ், பென்னாகரம் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் வெங்கடாசலம், தருமபுரி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குப்புசாமி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் ரமேஷ், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தருமபுரி நகராட்சி நிர்வாகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட வன அலுவலகம், மகளிர் திட்டம்,ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies