Type Here to Get Search Results !

சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மைய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணை தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies