கைவினைக் கலைஞர்களுக்கான “விர்சாத் (VIRASAT) மரபு உரிமை” கடன் திட்டம், விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 அக்டோபர், 2022

கைவினைக் கலைஞர்களுக்கான “விர்சாத் (VIRASAT) மரபு உரிமை” கடன் திட்டம், விண்ணப்பிக்க அழைப்பு.

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினத்தைச் சார்ந்தவர்களான முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்தமதச்சைச் சார்ந்த மரபு வழி கைவினை விளைப்பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “விர்சாத் (VIRASAT) மரபு உரிமை” என்ற கடன் திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்பபுறத்தில் ரூ.98,000/- க்குள் மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.1,20,000/- க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad