கல்லூரியின் முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் அவர்கள் தலைமை உரையாற்றினார் மேலும் முனைவர் பாக்கியம்மணி கணினி அறிவியல் துறை மற்றும் பேராசிரியர் ராஜேந்திரன் துறைத்தலைவர் கூட்டுறவுத்துறை அவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் தேசிய அளவிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் டீ கங்காதரன் இணை பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி சேலம் அவர்களும் முனைவர் மனு மங்காட்டு பேராசிரியர் கவிஞர் மொழி பெயர்ப்பாளர் ஐதராபாத் அவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு இக்கருத்தரங்கு தலைப்பில் மிகவும் அழகாக விரிவுரை ஆற்றினர்.
மேலும் இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை கருத்தரங்கில் சமர்ப்பித்தனர் ரவிச்சந்திரன் கௌரவ விரிவுரையாளர் ஆங்கிலத்துறை அவர்கள் நன்றியுரை ஆற்றினார் மேலும் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் ஆய்வு மலரை வெளியிட்டனர்.
