![]() |
| கைது செய்யப்பட்ட ராஜசேகர். |
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் அருகேவுள்ள கொண்டிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (48) திமுக கிளை செயலாளர் அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகியான ராஜசேகருக்கும் (37) இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, கடந்த மாதம் 20 ம்தேதி ராஜசேகர் கோவிந்தசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த கோவிந்தசாமி பூச்சி மருந்து குடித்துவிட்டு மாட்டு கொட்டகையில் மயங்கியுள்ளனர், வீட்டிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து வீட்டிற்கு கோவிந்தசாமியை அழைத்து வந்த நிலையில் கடந்த மாதம் 26 ம் தேதி கோவிந்தசாமி உயிரிழந்துள்ளார்.
உயிரழிந்த கோவிந்தசாமியின் மகன் புவனேஸ் காரிமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அரசியல் கட்சி நிர்வாகி ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்ப்பட்டுள்ள ராஜசேகர் மீது 306 உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, கைதாகியுள்ள ராஜசேகர் அரசியல் கட்சியின் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.


