தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஆனந்தியம்மாள் (வயது. 72). இவர் சற்று மன நலம் பாதித்தவர் உறவினர்கள் கைவிட்ட நிலையில் பாலக்கோடு, அமானி மல்லாபுரம், மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டு இரவு நேரங்களில் சாலையோர பகுதிகளில் தங்கி வந்தார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


