இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு கூறுகையில் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் திரு குமார் அவர்கள் கலந்து கொண்டு வேளாண்மை துறை மானிய திட்டங்களை குழு உறுப்பினர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
இக்கூட்டத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் திரு தண்டாயுதம் அவர்கள் கலந்துகொண்டு தோட்டக்கலைத் துறை மானிய திட்டங்களை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார்கள் மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு சிறுதானிய பயிர்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்று கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சி துறை உதவி பட்டு ஆய்வாளர் திருமதி சசிகலா அவர்கள் கலந்து கொண்டு பட்டு வளர்ச்சி துறையின் மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டின் அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி அவர்கள் கலந்து கொண்டு நன்றி உரை வழங்கினார்கள் இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வட்டார உழவர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


