தித்திக்கும் தீபாவளி திருநாளை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக இன்று தருமபுரி ரோட்டரி எரிவாயு தகன மையத்தில் பணி செய்து வரும் நான்கு நபர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிர்வாகி சதீஷ் அவர்கள் கூறும்போது, நல்ல உள்ளங்களின் சிறு சிறு பங்களிப்பின் மூலம் அடுத்த இரண்டு நாட்கள் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மனநல காப்பகம் ஆகியோர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள், பட்டாசுகள், மளிகை பொருட்கள் வழங்கி தித்திக்கும் தீபாவளியை கொண்டாட உள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மை தருமபுரி குடும்பத்தினர் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம், என மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.