தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி ஊராட்சிமன்றம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் ஊராட்சி மன்ற தூய்மை காவலர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசு தொகுப்பும், பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனித நேயம் காப்போம் என்ற மாண்பை காக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சுப்ரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட துனைசெயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி வரவேற்புரையாற்றினார்.
இதில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் மணி, ராஜகுமாரி மணிவண்ணன், கிருஷ்ணகுமார், பொருளாளர் முருகன், பேரூராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மற்றும் பொதுக்குழு உறுப்பிணர்கள் ஆப்பிள் பாபு, குட்டி மோகன், பேரூர் கழக செயலாளரும் தலைவருமான முரளி, வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், கிருஷ்ணன், அவைத் தலைவர் முனுசாமி, நிர்வாகிகள் வழக்கறிஞர் சந்திரசேகர், சண்முகம், ராஜபாட்ரங்கதுரை, ஹரிபிரசாத், கவுன்சிலர் கார்த்திகேயன், தங்கதுரை, சூடப்பட்டி துரைமுருகன், கோவிந்தராஜ், மகாலிங்கம், கண்ணன், மற்றும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வஜ்ரவேல் நன்றியுரை ஆற்றினார்.