பாலக்கோட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பாலக்கோடு ஒருங்கினைந்த குழந்தைகள் வளச்சி திட்ட அலுவலர் சித்ரா வரவேற்புரை ஆற்றினார், இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சந்தனம் பூசி, கைகளுக்கு வளையல் இட்டு, மங்களகரமான பொருட்கள் அடங்கிய தட்டுவரிசை சீதனமாக வழங்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் தலா ஒரு புடவை தாய் வீட்டு சீர்வரிசையாக வழங்கி கர்ப்பினிதாய்மார்களை ஆசிர்வதித்தார். அனைவருக்கும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுண்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்லம்பள்ளிஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி நன்றி தெரிவித்தார்.


