புதிய 100 K.V. மின்மாற்றியை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தீர்த்தகிரி நகர், அண்ணா நகர், முனியப்பன் கோவில் தெரு, இரயில்வே கேட் , அரசு பள்ளி பின்புறம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 200 வீடுகளில் குறைக்க மின் அழுத்த மின்சாரம் காரணமாக டி.வி, பிரிட்ஜ், பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வந்தன.
இந்த குறைபாட்டை போக்க பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 K. V. திறன் கொண்ட மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டது. புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்க்காக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா, உதவி செயற்பொறியாளர் அழகுமணி, முனிராஜ், அருள் பிரசாத், உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

