பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீ விபத்தில்லாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் பென்னாகரம் தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் மூலமாக செய்து காட்டப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுபதி அவர்கள் தலைமையில் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் முரளி, ராஜி, வினோத்குமார், சின்னச்சாமி, கார்த்திக் ஞானபிரகாசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை எப்படி வெடிப்பது என்பது பற்றியும் பட்டாசுகள் பிடிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் செய்து காட்டினார்கள்.
- பெரியவர்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- ஓரிரு வாளிகளில் தண்ணீர் மற்றும் மணல் வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
- பாட்டில் டப்பாக்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
- ஆடைகள் தீர்ப்பற்றினால் ஓடக்கூடாது தரையில் படுத்து உருள வேண்டும்.
- தீப்புண் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இது போன்று கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கி பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி செய்திருந்தார்.


