கவிதை,பேச்சு ஓவியம், போட்டோ எடுத்தல், கிராமிய குழு கலைநிகழ்ச்சி,இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத் குமார்,ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில் ராஜா, சமூக ஆர்வலர் பிறைசூடன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போட்டிகளின் நடுவர்களாக தமிழ்த்துறைதுணைத்தலைவர் சிவப்பிரகாசம், சின்னபள்ளத்தூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியை சாய் விஜயலட்சுமி, பாலக்கோடு மாதிரிபள்ளிமாதிரி பள்ளி இசை ஆசிரியை நீலா ,கல்பனா போட்டோ ஸ்டுடியோ ரவி, பாலக்கோடு ராம் போட்டோ ஸ்டுடியோ ராம்குமார், மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் வீரபத்திரன், பழைய தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் குணசேகரன், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ், சசி ஞானோதயா பள்ளி இணை இயக்குநர் சொப்னா சர்மா ஆகியோர் நடுவர்களாக இருந்து செயல்பட்டனர்.
மேலும் விளையாட்டு பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.புதூர், பூமரத்தூர், மடதள்ளி, அரங்காபுரம் உள்ளிட்ட இளைஞர் மன்றங்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
400க்கும் மேற்ப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள், கிராமிய கலைஞர்கள், நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


