தர்மபுரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டி.கே.ராஜேந்திரன் கழக அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் அனைத்து துறைகளிலும் நடைபெறும் முறைகேடுகள், கடுமையான மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பது போன்ற மக்கள் விரோத போக்கினை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலு மாநில அம்மா பேரவை துணைத் தலைவர், ஏகநாதன் மாவட்ட கழக துணை செயலாளர், முத்துசாமி மாவட்ட கழக அவை தலைவர், டி.கே.ஆர்.ரமேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர், நகரக் கழக செயலாளர் பார்த்திபன், டி எம் கோகுல்ராஜ் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட கழக சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

