பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு பகுதியில் குப்பைகள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது, ஆனால் சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கின்றன, தற்போது மழை காலம் என்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன்பு பல நாட்களாக தேங்கி கிடக்கிறது, மேலும் இந்த அலுவலகத்திற்கு எதிரே பள்ளி மாணவர் விடுதியும் அமைந்துள்ளது இதனால் மாணவர்கள் சுகாதார சீர்கெட்டிற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
மேலும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம், பொம்மிடி, பள்ளிப்பட்டி ,கோம்பூர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தினமும் வந்து செல்கின்றனர், எனவே தொற்றுநோய் மற்றும் நோய் பரவும் அபாய நிலை உள்ளது, பேரூராட்சி நிர்வாகம் முறையாக இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.