ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி செல்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது - தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பதினோராவது நாளாக தடை விதிப்பு.
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளன.
இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கரையை தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றபட்டு வந்தாலும் கூட தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த நீரானது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது இந்த வெள்ளத்திற்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசம் சவாரி செய்யவும் தொடர்ந்து பதினோராவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.