பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கால்நடைகளோடு ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கால்நடைகளோடு ஆர்ப்பாட்டம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கால்நடைகளோடு ஆர்ப்பாட்டம்

 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மடம் கிராமத்தில் 
  1. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்து தர வேண்டும் 
  2. ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்ய வேண்டும் 
  3. ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் பால் பாக்கி பணத்தை முழுவதுமாக வழங்க வேண்டும்
  4. குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடரை சேர்த்து வழங்க வேண்டும்
  5. தீபாவளிக்கு முன்பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் 
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கால்நடைகளோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே அன்பு தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் பி பெருமாள் சிறப்புரையாற்றினார் மாவட்ட செயலாளர் எஸ் தீர்த்தகிரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எம் குமார் மாவட்ட துணைச் செயலாளர் ஆ ஜீவானந்தம் உள்ளிட்டவர் கோரிக்கைகளை விலக்கி உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கால்நடைகளோடு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.